தீவனப் பற்றாக்குறை: கால்நடைகளுக்கு உணவாகும் கழிவுப் பஞ்சு
வெள்ளக்கோவில் பகுதியில் தீவனப் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உணவாகக் கழிவுப் பஞ்சு கொடுக்கப்படுகிறது. இப்பகுதியில் கறவை மாடு, எருமை, செம்மறி ஆடுகள் வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. மழை இல்லாததால், இப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி குறைவிட்டது. மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் காடுகளில் தீவனம் இல்லாததால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் கிடைத்து வந்த சோளத்தட்டு, நிலக்கடலைக் கொடி, வைக்கோல், மக்காச்சோளத் தட்டு ஆகியவற்றின் விலை அபரிதமாக உயர்ந்து விட்டது. போதுமான அளவுக்கு கிடைப்பதும் இல்லை. […]
Read More