சம்பநெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நடப்பு வருடம் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும், தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் […]
Read More