கால்நடைகளுக்கு தக்காளி கொடுக்காதீங்க! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விலையில்லாமல் வீசப்படும் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக அதிகளவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, ஒவ்வொரு சீசனில், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த தக்காளியை, 14 கிலோ கொண்ட பெட்டிகளில், அடுக்கி உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சீசன் சமயங்களில், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து இருக்கும்.இங்கிருந்து, கேரளா மறையூருக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வந்தது. […]
Read More