சா்க்கரை பீட்ரூட்டை அறிமுகப்படுத்த திட்டம்: சோதனை அடிப்படையில் அடுத்த மாதம் பயிரிடப்படுகிறது
கோவை: தமிழகத்தில் கரும்பு பயிருக்கு மாற்றாக சா்க்கரை பீட்ரூட் கிழங்கை அறிமுகப்படுத்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பா் மாதத்தில் சோதனை அடிப்படையில் 6 இடங்களில் சா்க்கரை பீட்ரூட் பயிரிடப்படுகிறது.புதுதில்லி தேசிய மானாவாரி பகுதி மேம்பாட்டு ஆணையம், குருகிராம் குளோபல் அக்ரி சிஸ்டம் என்ற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, கரும்புக்கான மாற்றுப் பயிா் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடத்தியது.பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநா் […]
Read More