தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி
தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி
Read MoreArchives
Date September 5, 2015 Author By admin Category தகவல்கள்
தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி
Read MoreDate September 5, 2015 Author By admin Category தகவல்கள்
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சேரன்மாதேவி தோட்டக்கலை உதவி இயக்குனர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு மானியம் உலகமெங்கும் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி, வருங் கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும் அபரிமிதமாக நீரை பயன்படுத்துவதை […]
Read MoreDate September 5, 2015 Author By admin Category தகவல்கள்
செடிமுருங்கையை விவசாயிகள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. முருங்கைக்காய் மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வது செடிமுருங்கை எனப்படுகிறது. இந்தச் செடி முறை விதைத்த 4 அல்லது 5 மாதங்களில் காய்க்கத் தொடங்குவதால் விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை காய்த்து விவசாயிகளுக்கு பயன்தரும். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்தச் செடிமுருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் […]
Read MoreDate September 4, 2015 Author By admin Category தகவல்கள்
ஸ்பைருலினா பாசி வளர்ப்பு வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் […]
Read MoreDate September 4, 2015 Author By admin Category தகவல்கள்
ஈரோடு மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது. இதில் புழுக்களின் உணவிற்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பட்டுப்புழு தொழிலில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மல்பெரி செடியினை தாக்கும் பூச்சிகளை கண்டறிந்து தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். மாவுப்பூச்சி மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப்பேன் மற்றும் கரையான் போன்றவை மல்பெரி […]
Read MoreDate September 3, 2015 Author By admin Category தகவல்கள்
மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண் வளம் காக்கும் அதேநேரத்தில், விதைகளுக்கு இயற்கை முறையில் வீரியம் கூட்டும் பயோ ஃபிக்ஸ் (Bio Fix) என்னும் இயற்கையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் நந்தகோபால். சென்னை மாநிலக் கல்லூரியில் மனோதத்துவம் படித்த நந்தகோபால், நஞ்சியலும் (Toxicology) முடித்தவர். இயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இவரும் இவருடைய சகோதரர் பிரேம்குமாரும் இணைந்து ’ரெவல்யூஷன்ஸ்’ என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தை 1987-ல் […]
Read MoreDate September 2, 2015 Author By admin Category தகவல்கள்
ஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம் ஏலச்செடிகளுடன் காளான் வளர்ப்பு என்ற கொள்கையை பரிசோதித்து வெற்றி பெற்றுள்ளார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன். இது பற்றி அவர் கூறுகையில், ஏலத்தோட்டங்களில் நிலவும் காலச் சூழ்நிலையையும் சீதோஷண நிலைகளைப் பயன்படுத்தி குடில்கள் அமைக்காமல் இயற்கையில் ஏலச்செடிகளுடன் காளான் வளர்த்து ஏல விவசாயத்தை மிகவும் லாபகரமாகவும், ஆர்கனிக் முறைக்கு மாற்றும் முயற்சி இது. இம்முறையை பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பலவகை நன்மைகளை தருகிறது. குறைந்த […]
Read MoreDate September 2, 2015 Author By admin Category தகவல்கள்
நெல் சாகுபடி – அங்கக மேலாண்மை – விவசாயியின் அனுபவம் எந்த வகை வேளாண்மைக்கும் ஆதாரமாக இருப்பது மண்வளம் தான். மண் வளமாக இருக்க மண்புழுக்களை மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத பலகோடிக்கணக்கான நுண்ணுயிர்களும் தேவை. பல தானிய விதைப்பு என்ற முறையை விவசாயி செயல்படுத்தி பல தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் இவற்றில் தலா 2 கிலோவும், (எண்ணெய் வித்துக்களில் எள், கடலை, கடுகு, ஆமணக்கு இவற்றில்) தயாரிக்கலாம். சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி இவைகளில் தலா […]
Read MoreDate September 1, 2015 Author By admin Category தகவல்கள்
இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் கத்தரிக்காய். இது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் குறைவான கலோரி, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி காணப்படுகிறது. கத்தரிக்காய் ரகங்கள் அதிக விளைச்சல் தரும் கத்தரிக்காய் ரகங்களில் கோ-2, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்.-1, பி.பி.ஐ.-1 அண்ணாமலை கத்தரி போன்றவை உள்ளன. இதேபோல் கோ.பி.எச்.-1 மற்றும் 2 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் துல்லிய பண்ணை முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. ஒரு ஏக்கரில் […]
Read MoreDate August 29, 2015 Author By admin Category தகவல்கள்
வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது: தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது. இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு […]
Read More