மூலிகை மருத்துவத்தில் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம்
கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் கூறியதாவது:
கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு, தீவனம் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை சிறப்பாக செய்தால் மட்டுமே, கோழி வளர்ப்பில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இதுதவிர, வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல், குடற்புழு ஆகிய நோய் தொற்றுகள் ஏற்பட்டு, கோழி வளர்ப்பில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும்.
மூலிகை தாவரங்களை பயன்படுத்தி, நோய்களுக்கு முதலுதவி செய்து, பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம்.
குறிப்பாக,கோழிகளுக்கு குடற்புழு நீக்கத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்
இதில், 15 தும்பை இலை, 15 கிராம் சீரகம், 15 வேப்பிலை, 5 மிளகு, 5 கிராம் மஞ்சள், 10 கிராம் கடுகு, 5 பல் பூண்டு, 50 கிராம் பாகற்காய் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில், சீரகம், கடுகு, மிளகு ஆகியவற்றை இடித்துக் கொள்ள வேண்டும். பிற மூலிகைப் பொருட்களை அரைத்து, 20 கோழிகளுக்கு தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும்.
இதுபோல, செய்வதால் கோழிகளுக்கு குடற்புழு எளிதாக நீக்கம் செய்து, கோழி வளர்ப்பில் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ரா.துரைராஜன்,
80981 22345.
நன்றி:தினமலர்