தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும்
பயிற்சி 11.04.2023 மற்றும் 12.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்
இதில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் ஆகியவைகளும், காளானில் இருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட் ஊறுகாய், ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 என்ற கட்டணத்தை பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு : பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி எண் – 94885 18268 மின்னஞ்சல்-phtc@tnau.ac.in