Myrada வேளாண் நிலையத்தில் 2 நாள் பயிற்சி!
ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் Myrada வேளாண் அறிவியல் நிலையம், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வேளாண்மை மீது விருப்பம் உள்ளவர்களை தொழில் முனைவோராக மாற்ற முன்வந்துள்ளது. இதற்காக காளான் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சி முகாம்
ஜூலை 26 மற்றும் 27ம் தேதிகளில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படு கிறது. இதில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி முகாமில், உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். காளான் வளர்ப்பு மற்றும், காளான் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு, அதனை சந்தைப்படுத்துதல் பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
கட்டணம்
காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாம் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்கூட்டியேத் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
கால அவகாசம்
அவ்வாறு முன்பதிவு செய்வதற்கு ஜூலை 27ம் தேதி வரை காலக்கெடுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் வரும்27ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.