தென்னை மரத்திற்கு நுண்ணூட்டச் சத்து இடுவது எப்படி?
தென்னை சாகுபடியில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பது எப்படி என்பதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்துகொண்டால் போதும். அதிக மகசூல் நிச்சயம் சாத்தியமாகும்.
அதிகரிக்கும் தென்னை சாகுபடி (Increasing coconut cultivation)
தமிழகத்தைப் பொறுத்தவரை, தென்னை சாகுபடி அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு ஏற்றவாறு, ஆட்கள் கிடைப்பதில் பெரும் பற்றாகுக்குறை நிலவுகிறது.
குறிப்பாகத் தற்போது ஆட்கள் பற்றாக்குறை பராமரிப்பு அதிகளவில் இருப்பதால் அதிக அளவில் நிலங்கள் வைத்து இருக்கும் விவசாயிகள் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்வம் இல்லை (Not interested)
தென்னை மரங்களுக்கு தழைச்சத்து மணிசத்து மற்றும் சாம்பல் சத்துக்ககளை வழக்கம் போல விவசாயிகள் இட்டு வருகின்றனர். ஆனால் நுண்ணூட்ட சத்துகளை இடுவதில் ஆர்வம் இல்லாத நிலை தான் காணப்படுகிறது.
நுண்ணூட்டம்
இதன் விளைவாக ஒல்லி காய்களும், தேரைக்காய்களும் சரிவர விளையாத (பருப்பு) காய்கள் தான் கிடைக்கின்றன.இதனைத் தவிர்க்க தென்னை நுண்ணூட்டச்சத்து ஒரு மரத்திற்கு ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து இட வேண்டும். இதன் விலை 82.20 மட்டுமே.
இதில் தென்னை மரங்களுக்குத் தேவையான இரும்பு சத்து 3.80%மும், மாங்கனிஸ் 4.80%மும், துத்தநாகம் 5%மும், போரான் 1.6%மும், தாமிரம் 0.5 சதவிகிதமும் உள்ளது. தென்னை சாகுபடி அதிகம் உள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த நுண்ணூட்ட சத்து விற்பனைக்கு உள்ளது.
எப்படி வைப்பது (How to place)
இந்த உரத்தை ஒருவருட தென்னை மரத்தின் தூரைச் சுற்றி 60 செ.மீ ஆரமுள்ள வட்டப்பாத்தி அமைத்து, ஆண்டுக்கு இரு முறை வைத்திட வேண்டும்.
வருடா வருடம் வட்டப்பாத்தியை தலா 45.செ.மீ அதிகரித்து கொண்டே போக வேண்டும்.
வட்டப்பாத்தி நுண்ணூட்ட சத்துடன் மக்கிய குப்பை/தொழு உரம் கலந்து இடவேண்டும்.
கூடுதல் வருமானம் (Extra income)
பின்னர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் இவ்வாறாக செய்தால் தரமான தேங்காய் விளைச்சல் தருவதுடன் அதிக எண்ணிக்கையிலான காய்கள் உற்பத்தியாகும். இதன்மூலம் கூடுதலாக வருமானமும் கிடைக்கும்.
தகவல்:
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289.
நன்றி:கிருஷி ஜாக்ரன்