அரசு கண்டிப்பு: இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க தடை
Government Strict: Ban on the sale of two pesticides
பிரதமரின் இயற்கை வேளாண்மை திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டு, இங்கு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறுபுறம் ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை ஒடுக்கும் நடவடிக்கையும் தடங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு உபயோகிக்கும் இரண்டு பூச்சிக்கொல்லிகளை விற்க தடை அரசு செய்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அவற்றின் பெயர்கள் ஸ்ட்ரெப்டோமைசின்(Strepsomysin) மற்றும் டெராசைக்ளின்(teracyclin) ஆகும். தக்காளி(Tomato) மற்றும் ஆப்பிள்(Apple) போன்ற பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க இவை பயன்படுவதாக கூறப்படுகிறது. 2024க்குப் பிறகு இந்த இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் விற்க அனுமதிக்கப்படாது. இந்த இரண்டு இரசாயனங்களும் பயிர் நோய்த்தொற்றைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன, ஆனால் அவை நுகர்வோரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசு 27 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் லாபியின் அழுத்தத்தால் இந்த முடிவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. தற்போது, இந்த பூச்சிக்கொல்லிகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இப்போது அது மனித உயிருக்கு ஆபத்தானது என்று அரசு கருதியதால், உடனடி நடைவடிக்கையாக, இவை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு புதிய பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்கும் விவகாரம் விவாதத்தில் உள்ளது.
உத்தரவு என்ன(What is the order)
பிப்ரவரி 1, 2022 முதல் ஸ்ட்ரெப்டோமைசின்(Streptomysin) மற்றும் டெராசைக்ளின்(teracyclin) என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மூலப்பொருளைக் கேட்ட நிறுவனங்களுக்கு பழைய இருப்புக்களை, அகற்ற கால அவகாசம் அளிக்கப்படும். இந்த இரண்டையும் வணிகம் செய்யும் நிறுவனங்கள் 2022 ஜனவரி 13 , 2024 வரை அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க முடியும். இது பூஞ்சைக் கொல்லி மற்றும் பாக்டீரியா தாவர நோய் கட்டுப்படுத்தி என்பது குறிப்பிடதக்கது.
எப்போது தடை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது(When did the demand for a ban arise?)
இந்த இரண்டு ரசாயனங்களையும் 2020ல் தடை செய்ய மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் அரசிடம் கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தக்காளி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக வாரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்’. இன்றளவும் உருளைக்கிழங்கு மற்றும் அரிசியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு இவை இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாசுமதி நெல் பூச்சிக்கொல்லி மருந்துகளும் தடை செய்யப்பட்டன(Basmati rice pesticides were also banned)
சமீபத்தில், பாசுமதி நெல் சாகுபடியில் பயன்படுத்தப்படும் 12 பூச்சிக்கொல்லி மருந்துகளை பஞ்சாப் அரசு தடை செய்தது. ஏனெனில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. வருங்காலத்தில் பாசுமதி பயிரிடும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்துகள் மீது சில நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நன்றி:கிருஷி ஜாக்ரன்