தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகத் திட்டம் (10-12-2021)
தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது ஏழு உறுதிமொழிகள் என்ற 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டத்திற்கான வாக்குறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தென்காசி, திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், தென்னையில் உற்பத்தித் திறனை உயர்த்தும் பொருட்டு “ தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகத் திட்டம்” என்ற திட்டம், நடப்பு 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்களுடன் உழவு மானியத்தையும் சேர்த்து 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நன்றி: வேளாண்மை துறை