தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பு(09-12-2021)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 21 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல் பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு மையத்திலும் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் டிசம்பர் 2021 முடிய தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.25 முதல் ரூ.27 வரை இருக்கும் மற்றும் தரமான கொப்பரையின் பண்ணை விலை ரூ.100 முதல் ரூ.102 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி- 0422 – 2431405
நன்றி:வேளாண்மை துறை