ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்
அன்பார்ந்த விவசாயிகளே!
விவசாய பெருமக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாடு ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இனங்கள்
பயிர் சாகுபடியுடன் கறவை மாடுகள் / எருமை, ஆடுகள் / செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், பயன் தரும் மரக்கன்றுகள், பழமரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய இனங்களுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது.
செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்
ஒருங்கிணைந்த பண்ணையம் சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி தவிர்த்து 35 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
பயன்கள்
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் நீடித்த நிலையான வருமானமும், நிலவளமும் பெறுவதுடன் விவசாய குடும்பங்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
நன்றி: வேளாண்மை துறை