பருத்தி விலை முன் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம் கடந்த 15 ஆண்டுகளாககொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை விலை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வின் அடிப்படையில்நல்ல தரமான பருத்தியின் விலை மார்ச் முதல் ஜூன் 2021 வரை குவிண்டலுக்கு ரூ.6500 முதல் ரூ.6900 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடர்ந்தால் விலை உயர்வுக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதால் விவசாயிகள் ஜூன்2021 வரை பருத்தியை சேமித்து விற்பனை செய்யலாம். மாசிபட்டதில் சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள்’ முன்னறிவிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் விதைப்பு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 2431405
மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்
பருத்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 2450498
நன்றி: வேளாண்மை துறை