மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!
இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் வாழையின் (Banana) பரப்பு 8.77 லட்சம் எக்டேர். அதில் உற்பத்தி 317.79 லட்சம் டன்கள் என்று தேசிய தோட்டக்கலை (National Horticulture) வாரியம் அறிவித்துள்ளது. முதலாவது முன்கூட்டிய அறிக்கையின் படி இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்கள்
தமிழகத்தில் வாழை
தமிழகத்தில் கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் அதிகம். திருச்சி, திருநெல்வேலி, கடலுார், தேனி மற்றும் கோவையில் உள்ள வாழை சந்தைகள் (Banana Market) உள்ளன. திருச்சி முக்கிய சந்தையாக உள்ளது. இங்கு லால்குடி, புதுக்கோட்டை, முசிறி, தேனி பகுதியிலிருந்து வாழை வரத்து உள்ளது. கோவை சந்தைக்கு புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, கடலுார் பகுதிகளிலிருந்து பூவன் பழ வரத்து உள்ளது.
சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து கற்பூரவள்ளி வரத்து வருகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து நேந்திரன் வரத்து ஜனவரியில் துவங்கியுள்ளது.
முன்னறிவிப்புத் திட்டம்
வர்த்தக தகவல் அறிக்கை படி, பண்டிகைகள் (Festivals) காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவை அதிகரிக்கும். இச்சூழலில் விவசாயிகள் விற்பனை (Sales) முடிவுகளை எடுக்க ஏதுவாக வேளாண் பல்கலை விலை முன்னறிவிப்புத் திட்டம் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை வரத்து ஆய்வு செய்யப்பட்டது.
பிப்., மார்ச்சில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25, கற்பூரவள்ளி ரூ.35, நேந்திரன் ரூ.40 வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காய்கறிகள் விலை:
இதேபோல தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.15 – ரூ.18, கத்திரி ரூ.30 – ரூ.32, வெண்டைக்காய் ரூ.25 – 27 வரை இருக்கும். இதன் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என, பல்கலை யின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை (Export Market) தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு
தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
வேளாண் பல்கலை, கோவை.
0422 – 661 1269.
நன்றி:கிருஷி ஜாக்ரன்