எள், கடலைக்கு விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்!
எள் (sesame), நிலக்கடலைக்கான (Groundnut) விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வப்போது வேளாண் பல்கலைக்கழகம் விதை முன்னறிவிப்பை வெளியிடுவது வழக்கம். இந்த ஆய்வின் அடிப்படையில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்.
எள் உற்பத்தி
வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாடு முழுவதும் எள் உற்பத்தி (Sesame production) 2020- 21 ல் 7.55 லட்சம் டன் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று புத்துார் விவசாயி ஆர்.கணேசன் (R. Ganesan) கூறினார்.
சந்தை ஆய்வு:
சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் நல்ல, தரமான எள்ளின் விலை அறுவடையின் (Harvest) போது (ஏப்ரல் – மே) கிலோ ரூ.95 வரை இருக்கும். இதே போல் நிலக்கடலை (Groundnut) 2020-21 ல் நாடு முழுவதும் சுமார் 95 லட்சம் டன் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2018- 19 ல் 4.85 லட்சம் டன் உற்பத்தியானது.
பெரும்பாலும் ஜூலை – ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்), ஜனவரி – பிப்ரவரி (தைப்பட்டம்) மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்படுகிறது. விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக பல்கலையின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் சந்தை ஆய்வில் அறுவடையில் (ஏப்ரல் – மே) தரமான நிலக்கடலையின் சராசரி பண்ணை விலை (Market rate) கிலோ ரூ.51 – 53 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம், என்றார்.
நன்றி:கிருஷி ஜாக்ரன்