விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவம்
விதை ஈரப்பதம் என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. விதையின் ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதைக்கெடுதல், பூச்சி தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது.
விதையின் ஈரப்பதம் மிகக்குறைவான நிலையில் இருந்தாலும், மிக அதிகம் இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன், சேமிப்பு கால அளவு, பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும்.
விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும்.
நெல் 13 சதவீதம், சிறுதானியங்கள் 12, பயறு வகைகள் 9, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் 9, பருத்தி 10 என விதை பயன்பாட்டிற்கான அதிகபட்ச ஈரப்பத சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், கம்பு, பாசி, உளுந்து போன்ற பயிர்களின் அறுவடை நடக்கவுள்ளது.
எனவே, விவசாயிகள் விதையினை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை மேற்குறிப்பிட்ட அளவிற்குள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள மாவட்ட விதை பரிசோதனை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
சி.சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர் மதுரை
இரா. இராமசாமி
வேளாண் அலுவலர்
பா.சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்
99528 88963
நன்றி:தினமலர்