காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு
அன்பார்ந்த விவசாயிகளே
இச்சூழலில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், ஒட்டச்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணைவிலை ரூ.17 முதல் 20 வரை, நல்ல தரமான கத்ரியின் விலை ரூ.23 முதல் 25 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை ரூ21 முதல் 23 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில், தொடர் பண்டிகை மற்றும் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் வரும் மாதங்களில் காய்கறிகளுக்கான சாதகமான விலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.. எனவே விவசாயிகள் மேற்கொண்ட சந்தை ஆலோசனையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 2431405
மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கயிகறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 6611374
நன்றி வேளாண்மை துறை