இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்!
இயற்கை விவசாயத்தில், வளமான மகசூல் பெற மண்ணின் வளத்தை கூட்டுவது, மண்ணுக்கு சத்தை வழங்குவது மிகவும் முக்கியம்.
எனவே இயற்கை வழியில் நெல் சாகுபடி செய்வது குறித்தும், அதிக மகசூல் பெறும் எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
குறுகிய கால ரகங்கள்
வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை
மத்திய கால ரகங்கள்
வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை
நீண்ட கால ரகங்கள்
வயது 140 நாட்களுக்கு மேல் (இவை நம் பாரம்பரிய ரகங்கள்)
சில ரகங்கள் சற்று மாறுபடலாம்
அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு மறை, நாற்றங்கால் தயாரிப்பு முறை ஆகியவை ஒன்றுதான்.
அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி, 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாகப் பிடிக்கும். அதிலும் வித்யாசம் இல்லை.
மாறுபாடுகள்
பயிர்கள் வளர்ச்சி பருவம், கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம் என பருவம் மாறுபடும். இந்த இரு பருவங்களும் பயிருக்குப் பயிர் மாறுபடும்.
கடைப்பிடிக்க வேண்டியவை:
1.மண்வளம் பராமரிப்பு (Sand)
- பல தானிய விதைப்பு
- பசுந்தாள் பயிர் செய்தல்
- ஊட்டமேற்றியத் தொழு உரம்
- மண் வளத்தைக் கூட்டும் ஊக்கிகளை உபயோகித்தல்
2. விதைத் தேர்வு மற்றும் நாற்றங்கால் (Seed)
- கலப்படம் இல்லாத விதைகள்
- உப்புநீர் கரைசலில் முளைப்பு திறன் குறைந்த நெல்லை நீக்குதல்
- 3.விதை நேர்த்தி
- உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி விதைகள் ஒன்றுடன்ஒன்று கலக்காமல் இடைவெளி
- கொடுத்து நாற்று விடுதல்
- 5ம் தான் பஞ்சகவியாத் தெளிப்பு
- 7ம் நாள் கற்பூர கரைசல் தெளிப்பு
- 10ம் நாள் பஞ்சகவியாத் தெளிப்பு
4.களைக் கட்டுப்பாடு
குறுகிய கால ரகங்களுக்கு 4 முறை (எதிர் எதிர் திசை) கோனோவீடர் ஒட்ட வேண்டும்.3 நாள் இடைவெளியில்
மத்திய கால ரகங்களுக்கு 6 முறை (எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்
நீண்ட கால ரகங்களுக்கு 8 முறை (எதிர் எதிர் திசை) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3
நாட்கள் இடைவெளியில்
ஒரு முறை கை களை எடுக்க வேண்டும்
5.பூச்சி / நோய் மேலாண்மை (Pest/Disease )
- நடவு செய்த 20ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 35ம் நாள் கற்பூர கரைசல் 8 pray
- நடவு செய்த 50ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 70ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 90ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 110ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 130ம் நாள் கற்பூர கரைசல் spray
- நடவு செய்த 150ம் நாள் கற்பூர கரைசல் spray
பயிர்களின் வயதை பொறுத்தும் தெளிப்புகளின் எண்ணிக்கையை கூட குறைத்து கொள்ள வேண்டும்.
தேவைக்கு ஏற்றார் போல உயிர் உரம் பூச்சி / பூஞ்சாண கொல்லிகளை பயம் படுத்திக் கொள்ளுங்கள்
6. இடுபொருட்கள் நிர்வாகம் (Fertilizers)
மண் வளத்தை கூட்டினால் தான் மகசூலில் நிறைவு கிடைக்கும்.கடைசி உழவுக்கு முன் 500 to 600 kg ஊட்டமேற்றியத் தொழு உரம் + 50 kg கரித்தூள் கலந்து இடவும்.ஒவ்வொரு முறை கோனோவீடர் ஓட்டுவதற்கு முன் நாள் ஏக்கருக்கு 100 to 150 kg ஊட்டமேற்றியத் தொழு உரம் + 10 kg கரித்தூள் கலந்து இடவேண்டும்.
- பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 200 litter ஜீவாமிர்தம் அல்லது அமிர்த கரைசல் விட வேண்டும்)
- பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்
- பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்.
- பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter மீன் அமிலம் கரைசல் விடவேண்டும்.
- பாசன நீர் வழியாக 30 நாட்களுக்கு ஒரு முறை 3 liter Humic acid கரைசல் விடவேண்டும்.
குறுகிய கால பயிர்களுக்கு 2 முறையும், மத்திய கால பயிர்களுக்கு 3 முறையும், நீண்ட கால பயிர்களுக்கு 4 முறையும், பஞ்சகவ்யா 3 literரை தேவையான அளவு ஓடை மண்ணில் கலந்து வயலில் 30 நாட்களுக்கு ஒரு முறை உரம் இடுவது போல இட வேண்டும்.
7. வளர்ச்சி ஊக்கிகள் (Growth inducers)
குறுகிய கால பயிர்களுக்கு 2 முறையும், மத்திய கால பயிர்களுக்கு 3 முறையும்,நீண்ட கால பயிர்களுக்கு 4 முறையும், ஒவ்வொரு வளர்ச்சி ஊக்கிக்கும் இடைவெளி 7 நாட்கள் என கருத்தில் கொண்டு தெளிக்க வேண்டும்.
1st EM கரைசல் 150 ml / tank
2nd மீன் அமிலம் 50 ml / tank
3rd EM கரைசல் 150 ml / tank
4th பஞ்சகவ்யா 150 ml / tank
6th 15 நாட்கள் புளித்த தமிழ் 500 tank
7th EM கரைசல் 150 ml / tank
8th un ab 50 ml / tank
9th EM கண்டால் 150ml / tank
10th பஞ்சகவ்யா 150 ml / tank
11th 15 நாட்கள் புளித்த தயிர் 500ml tank
மேலே உள்ள கரைசல்கள் பயிரின் வயதுக்கு ஏற்ப குறைத்து கொள்ளலாம். இந்த தெளிப்பு முறையை வயலில் ஒன்று இரண்டு கதிர்கள் வரும் வரை தெளிக்க வேண்டும். பால் பிடிக்கும் தருணத்தில் தேங்காய் பாலையும், மீன் அமிலத்தையும் 1:1 என்ற அளவில் கலந்து 4 நாட்களுக்கு ஒரு முறை என 3 தெளிப்பு தேவை. அதை தொடர்ந்து 7 to 10 days once மீன் அமிலம் 70ml/tank spray செய்யவும். கதிர்கள் வெளி வந்ததில் இருந்து பால் பிடித்து முற்றும் வரை ஜீவாமிர்தம்/ அமிர்த கரைசல் உடன் 25 kg சாம்பல் கலந்து பாசனம் வழியாக நிலத்துக்கு விடவும. இதனால் நல்ல எடையுள்ள நெல் மணிகள் கிடைக்கும்
8.நீர் மேலாண்மை (Water management)
ஆரம்ப காலங்களில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும்.ஒவ்வொரு முறை நீர் விடும் போதும் மேலே சொன்ன ஏதாவது ஒரு இடு பொருளோடு சேர்த்து விடவும். கதிர் வெளிவந்து பால் பிடித்து முற்றும் வரை நீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.அதிகப்படியான நீரும் பயிருக்கு நோயை உண்டாக்கும்.
தகவல்
ஜெயக்குமார்
வேளாண் ஆலோசகர்
மறைமலைநகர்
நன்றி:கிருஷி ஜாக்ரன்