“Uzhavan app” மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி? முழு வழிமுறைகள் இங்கே!
விவசாயிகளின் நிகர லாபத்தை உயா்த்தவும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், புதர் அகற்றும் கருவிகள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்க சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.
உழவன் செயலி (Uzhavan App)
இதனை விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் உங்களின் Mobile-லில் play store அல்லது App Store-ல் இருந்து உழவன் செயலியை (Uzhavan APP) பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- வேளாண் இயந்திரத்தை தேர்வு செய்தல்
- பின்னர் அதில் இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்யவேண்டும்.
- அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதை தேர்வு செய்யுங்கள்
- அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
- பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும்.
- பின்னர் உரிய விவரங்களைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு அடையாள மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்
தேவையான ஆவணங்கள்
இதன்பின்னர், விவசாயிகள் மத்திய அரசின் இணைய தளத்தில் தங்கள் நிலம் சம்பந்தமான விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், தங்கள் குடும்பத்தாரைப் பற்றிய விபரங்கள் அகியவற்றினை அளிக்கவேண்டும்.
மேலும் தனது புகைப்படம், அடையாள அட்டை இருப்பிடச் சான்று, பாஸபோர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை, சாதி மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் அகிய அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
பின்னர் தனக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை இணையதளத்தின் மூலம் தேர்வு செய்திட வேண்டும் அப்போது அவருக்கு 6 இலக்க இரகசிய குறியீட்டு எண் PIN No அளிக்கப்படும்.
நிபந்தனைகள்
இணையதளத்தில் விவசாயி தனக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் முகவரை தேர்வு செய்திட வேண்டும் இவ்வாறு 15 நாட்களுக்குள் உரிய முகவரை தேர்வு செய்யாத பட்சத்தில் அவரின் விண்ணப்பம் தனாகவே நிராகரிக்கப்படும்.
மேலும் 1 மாதத்திற்கு அவ்விவசாயியால் திரும்பவும் அதே வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.
அவ்வாறு தேர்வு செய்த முகவரை நேரில் சந்தித்து ஆவணங்களையும் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட 6 இலங்கு இரகசிய குறீயீட்டு எண்ணையும் அளித்திட வேண்டும்.
விவசாயி தேர்வு செய்த முகவரிடம் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு முகவரின் விற்பனை விலைக்குண்டான மொத்த தொகையினை வரைவோலையாகவோ, ரொக்கமாகவோ, வங்கி காசோலையாகவோ, வங்கி இணையதளம் மூலமாகவோ அளித்திடவேண்டும்.
முகவரின் விற்பனை விலையானது வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவியின் அடிப்படை விலை, போக்குவரத்து கட்டணம், மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அகிய அனைத்தையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி:கிருஷி ஜாக்ரன்
வேர்க்கடலை இயந்திரம்
Sc