PM- Kisan: விவசாயிகள் வங்கி கணக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணம்!
பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 10 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM-Kisan திட்டம்
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.
அடுத்த தவணை எப்போது? (Next payment)
இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இந்த ஆண்டுக்கான முதல் தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பி.எம் கிசான் திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமானpmkisan.gov.in இல் சரிபார்க்கலாம் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் தங்கள் ஆதார் அட்டை, வங்கி விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும் வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தில் மேலும் விவசாயிகளை இணைக்க மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் விவசாயிகள் தவறான விவரங்களை பதிவு செய்வதால் மானியம் பெற தகுதியுடை விவசாயிகளுக்கு மானியம் சென்று சேருவதில் சிக்கல் நீடித்து வருதாக கூறப்படுகிறது.
உங்களின் நிலை எப்படி அறிவது (Know your Status)
இதனை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in இல் Farmers Corner – என்பதை கிளிக் செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களின் நிலையை அறிந்துகொள்ள முடியும், மேலும் சரியாக புதுப்பிக்கப்படாத எந்த விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து சரி செய்துக்கொள்ள முடியும்.
மேலும் விண்ணப்பித்து பயன்பெற முடியாத விவசாயிகள் 011-24300606 என்ற இலவச எண்ணுக்கு அழைப்பு விடுத்து தங்களது வங்கி கணக்கு வரவு விபரங்களை சரிபார்த்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நன்றி:கிருஷி ஜாக்ரன்