வாழைக்கான விலை முன்னறிவுப்பு
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின், விலை முன்னறிவுப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வுகளின் முடிவுகளின் படி, மாநிலத்தின் முக்கிய சந்தைகளில் ஆகஸ்ட் மாதத்தில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.18-20 வரையும், கற்பூரவள்ளி ரூ.20-22 வரையும் நேந்திரன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.32-35 வரையும் இருக்கும் என கண்டறியபட்டுள்ளது.மேலும், இவ்விலையின் ஏற்றத்தாழ்வுகள், பருவமழை மற்றும் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு மற்றும் விழாக்களுக்கு தளர்வு அளிக்கபடுவதை பொறுத்து மாறுபடும். இதன் அடிபடையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கபடுகின்றனர். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 தொலை பேசி – 0422 – 2431405
நன்றி: வேளாண்மை துறை