சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவுப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் மற்றும் திருச்சி சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம்\ விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.36-38 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா வரத்தை பொறுத்து வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும் எனவே, விவசாயிகள் மேற்குறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 தொலை பேசி – 0422 – 2431405
வேளாண்மை துறை