பருத்திக்கான விலை முன்னறிவிப்பு
பருத்தி விவசாயிகள் விற்பனை மற்றும் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால் பருத்தி விலை வரும் மதங்களான மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு ரூ.5100 முதல் ரூ.5200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசயிகள் மேற்கொண்ட விலையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 தொலை பேசி – 0422 – 2431405
நன்றி: வேளாண்மை துறை