தமிழர் வேளாண் நாட்காட்டி
அனைத்து இயற்கை ஆர்வலர்களுக்கும் வணக்கம் ,
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வார் அவர்களின்,
“அனைத்து உயிர்களுக்கும் நஞ்சில்லா உணவு படைப்போம் ” என்ற கோட்பாட்டை செயல்படுத்த ,நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு எளிய வழிகாட்டியான தமிழர் வேளாண் நாட்காட்டியானது மூன்றாம் ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்,
தமிழர் வேளாண் நாட்காட்டியின் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு ,
1.பட்டம் பார்த்து பயிர் செய் என்ற அறிவுமொழியை பின்பற்ற
பட்டங்களும் அதற்கேற்ற பயிர்களும்!
- இயற்கை முறையில் உரங்கள். தயாரிப்பு முறைகள்.! வளர்ச்சி ஊக்கிகளான ஜீவாமிர்தம் , பஞ்சகவ்யம் ,மீன் அமிலம், மற்றும் பழக்காடி ஆகியவற்றை தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறைகள்.
- கடும் சவாலாக விளங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சு விரட்டிகள் தயாரிப்பு முறைகள் தெளிப்பு முறைகள்!
4.”விதைகளே பேராயுதம்” என்பதை உணர்ந்து விதைகளை காக்க விதை சேகரிப்பு முறைகள் மற்றும் பாதுகாக்கும் முறைகள்.
- ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய உழவுதொழில் சார்ந்த பணிகளான ஏர் உழ துவங்க உகந்த நாட்கள் , விதைப்பு துவங்க உகந்த நாள் , விதைப்பு செய்ய துவங்க உகந்த நாட்கள்.
- உழவர்களின் உற்ற துணையான “மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள்
” வாங்க உகந்த நாட்கள்.
7.மழைநீரை சேமித்து உயர்வு பெற “பண்ணைக்குட்டைகள் , கிணறுகள் ” தோண்ட துவங்க உகந்த நாட்கள்
- நோய் கட்டுப்பாடு மாற்று வருமான பேருக்கும் யுக்தியான , கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி .
- கத்திரியில் பூச்சு கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
10.முழுமையான நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை.
- முந்திரியில் அதிக மகசூல் எடுக்க பின்பற்றவேண்டிய நெறிமுறைகள்
12.மண்ணிற்கேற்ற மரங்கள்.!
- நீர் மேலாண்மை.! மற்றும் மழைநீர் சேகரிக்கும் யுக்திகள்,
14 மத்திய அரசின் வேளாண் ஆராட்சி நிலையங்களின் முகவரிகள் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன .
15, கிராமசபை கூட்டங்கள் நடக்கும் நாட்கள்.
16 மேலும் வேதி உங்களுக்கு நிகரான இயற்கை உரங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பாரம்பரிய விவரங்களை எளிதாக குறிப்பிடப்பட்டுள்ளது ..
?அனைவரும் வாங்கி பயன் பெறுங்கள்.! இளம் இயற்கை விவசாயிகளுக்கு இதை வாங்கி பரிசாகவும் வழங்குங்கள்.! நம் மண் காப்போம், விவசாயம் காப்போம். ஆரோக்கியமான உணவு உண்போம் .!
தமிழர் வேளாண் நாட்காட்டி தேவைப்படுவோர் 9965869470/8190971323 என்ற எண்களுக்கு (whatsapp ) மூலம் தொடப்புக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம் ..