வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை
விவசாயிகள் தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தை பயனுள்ளதாகவும், லாபகரமாகவும் மாற்ற, தங்களிடம் விற்பனைக்கு உள்ள விளை பொருள்களை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு அவசியமாகும். இத்தகைய ஆசாதாரண சூழலில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
விவசாயிகளுக்கான ஆலோசனை (Guideline For Farmers)
உழவு மற்றும் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களையும், விளைப் பொருட்களையும் பாதுகாப்பது என்பது அவசியமானதாகும். பயிர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் இதோ உங்களுக்காக
- முதலில் விசாயிகள் தங்களிடம் உள்ள வேளாண் விளை பொருள்களை தடையில்லாமல் உழவர் சந்தைகளிலோ அல்லது உள்ளுர் சந்தைகளிலோ அல்லது மொத்த சந்தைகளிலோ எடுத்து செல்வதற்கு வேளாண் உற்பத்தி ஆணையரின் அனுமதி கடிதம் அவசியமாகும் என்பதால் அதனை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
- சந்தைகள் மற்றும் விற்பனை மையங்கள் என எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையிருப்பின் இதற்காக, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் உதவியை நாடலாம்.
- விவசாயிகள் தங்களின் வேளாண் பணி தடையின்றி நடைபெற அனைத்து மையங்களும் தொடர்ந்து செயல்படும். அடிப்படை இடுபொருளான விதை மற்றும் சேகரிப்பு, பரிசோதனை, தரம் பிரித்தல் மற்றம் சிப்பம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் மையங்கள் வழக்கம் போல் தொடா்ந்து செயல்படும்.
- விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை அந்தந்த மாவட்ட அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் முதன்மை பதப்படுத்தும் மையங்கள் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ச்சியாக செயல்படுகிறது.
- காரீப் (Karif) பருவத்திற்கான நடவு பணிகள் நடைபெறுவதால் தடையின்றி விதைகள் கிடைப்பதை தனியார் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- அரசு, கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை மைங்களில் தேவையான உரங்களை வாங்கிக்கொள்ளலாம்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
- கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுளோர் அவைகளுக்கு தேவையான தீவனங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் (Seed Management and Technology)
- ரபி (Rabi) பருவ நெல், நிலக்கடலை மற்றும் எள் போன்றவை அறுவடைக்கு தயாராக உள்ளதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது, இதை கையாள்பவர்களும், இயந்திரமும் சுத்தமாக இருத்தல் அவசியமாகும்.
- இயந்திரங்களை அறுவடைக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது அதன் தூய்மையை உறுதி செய்தல் அவசியமாகும்.
- பயிர்களில் தற்போது வாழை, மரவள்ளி கிழங்கு, எலுமிச்சை, முந்திரி, பப்பாளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. எனவே அறுவடை மேற்கொள்ளும் போது, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆரம்ப கட்டத்தில் தோன்றும் முன்பருவ தண்டுத்துளைப்பான் பாதிப்பை தவிர்க்க ஒட்டுண்ணி விடுதல் (அ) பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.மேலும் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 ஜி குருணை-4 கி, ஏக்கர் (அ) பிப்ரோனில் 0.3 ஜிஆர்-4 கி, ஏக்கர் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
- விவசாயிகள் மா பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க நுண்ணூட்டக் கலவையை (Micronutrients) உபயோகிக்கலாம்.
- தென்னையில் வெள்ளை சுருள் ஈ பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது என்கார்சியா ஒட்டுண்ணியின் நடமாட்டமும் இருப்பதால் விவசாயிகள் பூச்சிகொல்லி மருந்துகளை தவிர்த்து 5 அடிக்கு 3 அடி அளவிலான மஞ்சள் வண்ண 10 சதவீதம் ஸ்டாச் கரைசலை தெளிக்கலாம்.
நன்றி:கிருஷிஜாக்ரன்