பருப்பு வகைகளுக்கான விலை முனறிவிப்பு
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய உளுந்து மற்றும் பச்சை பயிறு விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிபடையில் அறுவடையின் போது (மார்ச் – ஏப்ரல்,2020) தரமான உளுந்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 65 முதல் ரூ. 67 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான பச்சை பயிறு சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 68 முதல் ரூ.70 வரை இருக்கும் என கணிக்கபட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து வரும் வரத்து மற்றும் இறக்குமதியை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். தற்போது, நெல் தரிசு பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சை பயிறு அறுவடை தொடங்கியுள்ளது எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிபடையில் விற்பணை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கபடுகின்றனர்.
வேளாண்மை துறை