கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் (NADCP) கீழ் முதலாவது சுற்றில் மாநிலத்திலுள்ள அனைத்து தகுதியுள்ள மாட்டினங்களுக்கும் இலவசமாக, வரும் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் மார்ச் மாதம் 19-ம் தேதி வரை உங்கள் ஊரிலேயே வந்து தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசிபோட்டு, உங்கள் கால்நடைச் செல்வங்களை கோமாரி நோயிலிருந்து காப்பாற்றி பயனடைவீர்! மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரைஅணுகவும்.
-கால்நடை பராமரிப்புத்துறை