இயற்கை முறையில் வேர்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை ஆலோசனை
வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்வதன் மூலம் வேர்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெற முடியும் என்கிறார்கள் தோட்டக்கலை துறை வல்லுநர்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லி ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
எர்வினியா கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்
வாழையின் நடுக்குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி, அதற்கு சற்று முன்னர் தோன்றிய இலைத் தண்டினுள் சொருகியது போல காணப்படும். கிழங்கானது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போன்று தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப் பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழேவிழும். கிழங்கு மட்டுமே மண்ணிலேயே இருக்கும். (நன்றி:விகாஸ்பீடியா)
தடுக்கும் முறை
வேர்புழு நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ செண்டுமல்லி பயிரிடலாம். பூக்களின் வாசனையால் வேர்புழுக்கள் ஈர்க்கப்பட்டு அதன் வேர்களில் சென்று தாங்கும். பூக்கள் பூக்கும் தருவாயில் வேருடன் பிடிங்கி அப்புற படுத்த வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழையின் வளர்ச்சி பாதிக்காது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் ஐந்திற்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் வாழையை இலைப்புள்ளி நோய், கிழங்கு அழுகல் நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. செண்டு மல்லி பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என்றனர்.
நன்றி:கிருஷி ஜாக்ரன்