கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான தகவல்!
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க மத்திய மாநில அரசால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்ட மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் கரும்பு விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்திற்கு ஏற்றவாறு தேவைப்படும் கூடுதல் உபகரணங்களுக்கான தட்டு வடிகட்டி, மணல் வடிகட்டி, ஹைட்ரோ சைக்ளோன் வடிகட்டி, பிவிசி குழாய், நீர் சேமிக்கும் உப துணை குழாய் முதலியன 100 சதவீதம் மானியத்தில் சிறு / குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே, கரும்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் எந்தவித கூடுதல் செலவினம் இன்றி அமைத்து கொள்ளலாம். இது தொடர்பாக, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேளாண்மை துறை