வெண்டைக்காய் விலை குறையாது
வரும் பிப்ரவரி மாதம் முடிய வெண்டைக்காய் விலை குறையாது என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : சேலம், கோவை, தேனி திருச்சி மாவட்டங்களில், பிப்ரவரி (தை பட்டம்) மாதம் மற்றும் ஜூன் (ஆடிப்பட்டம்) முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெண்டைக்காய் விலை ஏறுமுகமாகவே இருக்கும். இந்நிலையில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, வேளாண் பல்கலையின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம் கடந்த, 12 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் வெண்டைக்காய் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் வரும், பிப்ரவரி மாதம் வரை தரமான வெண்டைக்காய் பண்ணை விலை, கிலோ, ரூ.23 முதல் ரூ.25 வரை இருக்கும். தக்காளி, ரூ.18 முதல் ரூ.20 வரை, கத்தரிக்காய், ரூ.28 முதல் ரூ.30 வரை இருக்கும். குறிப்பாக, வெண்டைக்காய் விலை வரும் பிப்ரவரி மாதம் வரை குறையாது. எனவே, விவசாயிகள் இதன் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். விபரங்களுக்கு, 0422-2431405 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்