2019-20ஆம் ஆண்டில் நெற்பயிருக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை
அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே,
தமிழகத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் அறுவடை தொடங்கியுள்ளது. வேளாண் பெருமக்களால் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் பொருட்டு மாநில அரசு குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் ஊக்கத்தொகையாக சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.70ம், சாதாரண ரகத்திற்கு ரூ.50ம் சேர்த்து ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.1905/- எனவும், சாதாரண ரகத்திற்கு ரூ.1865/- எனவும் நிர்ணயம் செய்து அரசு ஆணை வழங்கியுள்ளது.
இவ்விலை 1.10.2019 முதல் 30.09.2020 வரை காலத்திற்கு பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து அதிக வருமானம் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண்மை துறை