பஞ்சாயத்து மகளிர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க அரியதோர் வாய்ப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து மகளிர் குழுக்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க முன் வரலாம். இதில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் . மையங்களுக்கு 80 சதவீதம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் வரை மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்படும். குழுக்கள் தங்கள் பங்களிப்பாக 5 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள 15 சதவீதம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மாநில சமச்சீர் நிதி மூலம் மானியம் வழங்கப்படும். குழுக்கள் தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தங்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து மகளிர் குழுக்கள் பயன்பெறலாம்.
விருப்பம் உள்ள பஞ்சாயத்து மகளிர் குழுக்கள் தங்கள் மாவட்டத்தின் வருவாய் கோட்டதில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலங்க கள் மற்றும் மாவட்டத்தின் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலங்கத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயடைவீர்
வேளாண்மை பொறியியல் துறை