நவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்
அன்பார்ந்த விவசாயிகளே,
தமிழகத்தில் நவரை/கோடை நெல் பயிர் சாகுபடி பரவலாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் இருப்பில் உள்ள நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்வதன் பயன்கள்:
சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 20-25% குறைகிறது.
நாற்றங்கால் அமைக்க ஏக்கருக்கு 3 கிலோ விதை 1 சென்ட் நிலத்தில் விதைத்தால் போதுமானது.
14 நாள் வயதுடைய இளம்நாற்று 22.5 X 22.5 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து களையெடுப்புப் பணிக்கு கோனோவீடர் களைக்கருவி உபயோகிப்பதால் அதிக வேர் வளர்ச்சி, அதிக துhர் எண்ணிக்கை மற்றும் அதிக நெல் மணிகளுடன் 20-25% கூடுதல் மகசூல் கிடைக்கும், வேலையாட்கள் செலவு குறையும்.
பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.
பயிர் சாகுபடி செலவு குறைவதாலும் அதிக மகசூல் கிடைப்பதாலும் அதிக லாபம் ஈட்டலாம்.
வேளாண்மை துறை