பயிற்சிகள் ஜனவரி 2020
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சி விவரங்கள்
நாள்
பயிற்சி
08 /01/20
புறக்கடை கோழி வளர்ப்பு
20/01/20
காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
20/01/20
நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்
21/01/20
கெண்டை மீன் வளர்ப்பு, குஞ்சு உற்பத்தி, குஞ்சு பொறிப்பக தொழில்நுட்பங்கள்
22/01/20
விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு
23/01/20
மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல்
24/01/20
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள்
பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371
காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் இயற்கை வேளாண் சந்தை..!
இயற்கை வேளாண் சந்தை..!
திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 5-ம் தேதி அன்று இயற்கை வேளாண் சந்தை நடைபெற உள்ளது.
சந்தை நடைபெறும் நாள் : 05.01.2020 (ஞாயிறு)
சந்தை நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
இடம் :
திரு. மீனாட்சி சுந்தரம் இயற்கை வேளாண் பண்ணை,
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
? தொடர்புக்கு : 9787012495
காளான் வளர்ப்பு பயிற்சி..!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி அன்று காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 09.01.2020 (வியாழன்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
முகவரி :
பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630212.
? முன்பதிவு செய்ய : 9488575716, 7708820505
தேனீ வளர்ப்பு பயிற்சி..!
தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்…!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020 (வியாழன்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம் :
பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630212.
? முன்பதிவு செய்ய : 9488575716, 7708820505
இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி..!
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி..!
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 23-ம் தேதி அன்று கறவை மாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 23.01.2020 (வியாழன்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம் :
உழவர் பயிற்சி நிலையம்,
ஏனாத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
? தொடர்புக்கு : 044-27264019, 7530052315
இயற்கை இடுபொருள் தயாரிப்பு களப்பயிற்சி..!
ஈஷா விவசாய இயக்கம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி அன்று இயற்கை இடுபொருள் தயாரிப்பு என்ற தலைப்பில் களப்பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 25.01.2020 (சனிக்கிழமை)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம் :
அசோகன் இயற்கை விவசாய பண்ணை,
ரெட்டியார் தோட்டம்,
வாய்க்கால் மேடு பிரிவு,
கேசரிமங்கலம்,
பவானி (பவானி வழ மேட்டூர் மெயின் ரோடு),
ஈரோடு மாவட்டம்.
முன்பதிவு செய்ய : 8300093777, 9442590077
வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
கோவை, சரவணம்பட்டி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை, சரவணம்பட்டி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் வரும் 23, 24ம் தேதிகளில் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சியில் விவசாயிகள், தொழில்முனைவோர், ஊரக மகளிர், கறவை மாடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளோர் பங்கேற்கலாம். பயிற்சி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 0422 2669965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் அரங்க.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி கொட்டப்பட்டு கோழிபண்ணை சாலையில் செயல்படும் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், வருகிற 23 மற்றும் 24ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்தடுப்பு முறைகள், மடிநோய் தடுப்பு முறைகள், தீவன புற்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு பற்றிய முறைகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்படி இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 23ம் தேதி காலை 10 மணிக்குள் நேரில் வர வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 28ல் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் இம்மாதம் 28ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வரும் 28ம் தேதி காலை 10 மணி முதல் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கையில் வறுமை வெல்ல சிறந்த தொழில் முறை வழி காட்டி. அன்புடன் நாம்.