நுண்ணீர்பாசனம் அமைக்கவிரும்பும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA) திட்டத்தின் மூலம் கூடுதல் மானிய உதவிகள்
அன்பார்ந்த உழவர் பெருமக்களே
துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ், நுண்ணீர்ப்பாசன முறையினை அமைப்பதற்கு முன் வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குழாய்க்கிணறு/ துளைக்கிணறு அமைக்கவும், நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின் /மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலைநீர் மேலாண்மைப் பணிகளுக்காகவும் அரசுமானியம் வழங்குகிறது.
நுண்ணீர் பாசனத் திட்டத்திற்காக MIMIS இணையத்தில் பதிவுசெய்யும் பொழுதே இத்திட்டத்திற்காகவும் பதிவுசெய்யவேண்டும். மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசனமுறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தில் வழங்கப்படும் மானிய விபரம்.
பாதுகாப்பானகுறுவட்டங்களில்குறைந்தமிதமான ஆழமுள்ள துளைக்கிணறு / குழாய் கிணறுஅமைத்தல் – 50 சதவிகித மானியத் தொகை ரூ.25,000/- க்கு மிகாமல் ( 1 எண்)
டீசல்பம்புசெட்/மின் மோட்டார் நிறுவுதல் – 50 சதவிகிதமானியத் தொகை ரூ.15,000/- க்கு மிகாமல்( 1 எண் )
பாசனக்குழாய்கள்அமைத்தல் -50 சதவிகிதமானியத் தொகை ரூ.10,000/எக்டர் (ஒருபயனாளிக்குஅதிகபட்சமாகஒருஎக்டர் வரைமட்டுமேமானியம் வழங்கப்படும்)
தரைநிலை நீர் சேகரிப்புதொட்டிஅமைத்தல் – 50 சதவிகிதமானியத் தொகையாகஒருகனமீட்டருக்கு ரூ.350 வீதம் ஒருபயனாளிக்கு ரூ.40,000/- வரை
மேலும் விபரங்கள்அறிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறகேட்டுக்கொள்ளப்படுகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை