கறவை மாடுகளுக்கு முதலுதவி மற்றும் மூலிகை மருத்துவ பயிற்சி
தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி வரும் டிச. 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் காலை 10 மணி முதல் கறவை மாடு வளர்ப்பு குறித்து பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தோன்றும் நோய்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி, சினை கால பராமரிப்பு, முதலுதவி, மூலிகை மருத்துவம் போன்ற தகவல்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.
பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் பயிற்சி குறித்த விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.