படைப்புழு மேலாண்மை..!
ஏற்கனவே இருக்கும் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில் தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த சின்னஞ்சிறிய புழு விவசாயிகளை வாட்டிவதைக்கின்றது இந்த படைப்புழு. இந்த படைப்புழு (pest attack) குறிப்பாக மக்காச்சோளம், கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் (pest attack) அதிகமாகக் காணப்படுகிறது.
சரி வாருங்கள் இந்த பகுதியில், படைப்புழு தாக்கும் பயிர்களையும் (pest attack), அதன் புழு தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
படைப்புழு தாக்குதல் (Pest Attack):
இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தும் இப்புழுவை முழுவதும் கட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது.
இந்தப் புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்துடன் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் உயிரியல் ஆய்வுக்கூடம் உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்துள்ளது.
பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை, ஈரோடு மாவட்ட வேளாண்மைத் துறை இணைந்து மாவட்டத்தின் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.
இதன் மூலம் பயிர்களைத் தாக்கிய படைப்புழுவை உயிரியல் பூச்சிக்கொல்லி முற்றிலும் கட்டுப்படுத்தியது விவசாயிகளிடம் உறுதிப்படுத்தப்பட்டது.