பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா?
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள்
தேவைப்படும் ஆவணங்கள்:
1. முன் மொழி படிவம்
2. விண்ணப்ப படிவம்
3. சிட்டா(சமீபத்தில் எடுத்தது).
4. அடங்கல் ( பயிர், சர்வே எண் மற்றும் சாகுபடி பரப்பு, பசலி 1429 என்று முதல் சாகுபடி பருவம் கலத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கு வேண்டும்).
5. வங்கி கணக்கு book ( அசல் மற்றும் முதல் பக்கத்தின் நகல்).
6. ஆதார் ( அசல் மற்றும் நகல்).
மேற்கண்ட ஆவணங்களுடன் ஏதாவது ஒரு பொது சேவை மையத்தை (Common Service Centre) அணுகவும.
ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை விவரம்:
வேளாண்மை பயிர்கள்:
நெல் -1(குறுவை) ரூ.627
உளுந்து ரூ.315
பச்சைப்பயறு ரூ.315
( பிரிமியம் செலுத்த கடைசி நாள்: 16.08.2019)
மக்காச்சோளம் ரூ.507
சோளம் ரூ. 294
ராகி ரூ.258
துவரை ரூ.315
நிலக்கடலை ரூ. 496
பருத்தி ரூ.1290
(பிரிமியம் செலுத்த கடைசி நாள்: 31.08.2019)
தோட்டக்கலை பயிர்கள்
தக்காளி ரூ.1850
(கடைசி நாள்: 31.08.2019)
வாழை ரூ.3135
கத்தரி ரூ.1240
மா ரூ.1088
மரவள்ளி ரூ.1755
மஞ்சள் ரூ.3260
(கடைசி நாள்: 30.09.2019)
மேலும் தகவல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.