கோழிகளுக்கும் மூலிகை வைத்தியம்
கோழிகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் வயிற்றில் இறைச்சல் உண்டாகும். சரியான உணவு எடுக்காமல் வாந்தி எடுக்கும். இதற்கு வெந்தயம் 10 கிராம், சுக்கு 10 கிராம், பெருங்காயம் 10 கிராம், வாய் விடங்கம் 10 கிராம், திப்பிலி 10 கிராம், கேழ்வரகு மாவுடன் சேர்த்து 10 கோழிகளுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் அஜீரணம் குணமாகும்.
வெள்ளைக் கழிச்சல்: மெலிவாக இருக்கும். வெள்ளை நிறத்தில் கழியும். தள்ளாடி நடக்கும். இதற்கு குடிநீரில் 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட், படிகாரம் கலந்து மூன்று முறை கொடுத்தால் குணமாகும்.
ராணிக்கட் கழிச்சல்: கோழிகள் பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் கழிக்கும். நீர் வடியும், கோழிகள் இறக்கும். இதற்கு அருகம்புல், ஆவாரம்பூ, நெல்லிக்காய், வெங்காயம், கீழாநெல்லி 50 கிராம் வீதமும், கஸ்துாரி
மஞ்சள் 10 கிராம், உப்பு 10 கிராம், கற்கண்டு 10 கிராம் என்ற வீதத்தில் அரைத்து குடிநீரில் கலந்து 10 முதல் 20 நாட்கள் கோழிகளுக்கு கொடுக்க குணமாகும்.
நாட்டுக்கோழி கழிச்சல்: இதற்கு நற்சீரகம் 10 கிராம் அரைத்து கொடுக்க உடன் குணமாகும்.
சுவாச நோய்கள்: பண்ணைகளில் கோழிகளின் மூக்கில் சளி ஒழுகும். தீவனம் எடுக்காது. எடை குறையும். குரட்டை விடும். இதற்கு 100 கிராம் துளசியை குடிநீரில் கலந்து கொடுக்க சளி குணமாகும் அல்லது அரை கிலோ செந்தட்டி வேரை பொடி செய்து 100 கோழிகளுக்கான தீவனத்தில் 2 நாட்கள் கொடுக்க சளி குறையும். பின் கருப்பட்டி, பனங்கற்கண்டு 100 கிராம் தண்ணீரில் கலந்து கொடுக்க சளி குறையும். தொடர்புக்கு 95662 53929.
– எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை
Google message
நீங்க என்ன சொல்ல வந்த தகவலை முழுமையகா கூறவும்