பயிற்சிகள்(ஜனவரி2017)
ஜன.5-இல் மண்புழு உரம் தயாரிப்பு இலவசப் பயிற்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
இப்பயிற்சி முகாமில் மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி முறை மற்றும் குவியல் முறையில் மண்புழு உரம் தயாரித்தல், பயிர் கழிவுகள், நகரக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கும் மண்புழு உரப் பரிந்துரை அளவு, மண்புழு உரத்தின் நன்மைகள், மேலும் வெர்மிவாஸ் (மண்புழு ஊட்டநீர்) தயார் செய்யும் முறை, அதனை பயிர்களுக்கு தெளிக்கும் அளவு பற்றிய தலைப்புகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, வரும் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்டவிவசாயிகளுக்கு முன்னுரிமைவழங்கப்படும்.
நன்றி தினமணி
கறவை மாடு வளர்ப்பு
கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அர்த்தனாரி ஈஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திருப்பூரில் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய இரு நாட்கள் கறவை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலை 10.30 முதல் மாலை 4மணி வரை நடக்க உள்ள இப்பயிற்சில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் கறவை மாடு வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள்,வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும்
நன்றி தினமலர்