பயிற்சிகள் ஆகஸ்ட்(2016)
நாட்டுக்கோழி வளர்ப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில்,ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு,இலவச பயிற்சி முகாம்,ஈரோடு-சத்தி சாலையில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம பயிற்சி மையத்தில்,வரும் ஆகஸ்ட்,2,3 தேதிகளில் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பண்ணையாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்
தொடர்புக்கு 0424-2291482
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 9 மணிக்கு ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இப்பயிற்சியில், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், விதி உற்பத்தி செய்யும் முறைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது. பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான கலைக்கொல்லிகள் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் படுகிறது.
மேலும், நீர் நீர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் கலைக்கொடியை சேமிக்கும் முறைகள், தீவனமாக பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு வரும் 7ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 17ம் தேதி, காலை, 9 மணிக்கு, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம், மாதிரி எடுக்கும் முறை, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில் முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, நேரிலோ அல்லது, 04286 – 266 345, 266 650 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை, 16ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.