பயிற்சிகள்(ஜுலை2016)
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி
‘நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, தீவனபயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய இணைபேராசிரியர் மற்றும் தலைவருமான அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி காலை, 9 மணிக்கு, ‘தீவனப்பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது. இதில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு உகந்த தீவனப்பயிர் வகைகள், மண்ணின் தன்மைக்கேற்ற தீவனப்பயிர்கள் சாகுபடி, விதைநேர்த்தி செய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம். விவரங்களுக்கு, 04286 – 266 345, 266 650 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஜூலை, 9ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
நன்றி: தினமலர்