வெண்டை பயிரை தாக்கும் பூச்சிகளும் மேலாண்மை முறைகளும்
வெண்டை பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காணலாம்
புள்ளி காய் துளைப்பான்
வெண்டை பயிரில் உள்ள பூ காய்கள் தோன்றுவதற்கு முன்பே இளம் தண்டுகளை துளைத்து உட்பகுதியை இந்த புழுக்கள் உண்பதால் தண்டுப்பகுதி வாடி பின்பு காய்ந்து விடுகிறது மேலும் இளம் காய்களை துளைத்து சேதப்படுத்துகிறது தாக்கப்பட்ட பூ மொட்டுகள் மற்றும் பூக்களின் இளம் காய்கள் முழு வளர்ச்சி அடையாமல் உதிர்ந்து விடுகிறது வளர்ச்சியடைந்த காய்கள் தாக்கப்பட்டாலும் அவைகள் செடிகளில் இருந்து உதிர்வதில்லை காய்கள் வளைந்தும் நெளிந்தும் சுருண்டும் உருமாற்றம் அடைந்து காணப்படும் இதனால் 20முதல் 25%வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது
அந்துப்பூச்சி
பெண் அந்துப்பூச்சிகள் ஒரு முறை 355 முட்டைகள் வரை இடும். 3முதல் 4 நாட்களில் இருந்து இளம் புழுக்கள் வெளிவருகிறது அது 10முதல்15 நாட்களில் முழு வளர்ச்சி பெற்று அந்துப்பூச்சிகளாக உருமாற்றம் அடைகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
*ஏக்கருக்கு 4அல்லது 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்
*பூக்கள் தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூக்களை அவ்வப்போது வயல்களில் இருந்து அகற்ற வேண்டும்
*பூச்சிகள் முட்டையிடும் தருணத்தில் டிரைகோகிரம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 4ஆயிரம் வீதம் வெளியிட வேண்டும்
*இரைவிழுங்கி இனத்தை சேர்ந்த பச்சை கண்ணாடி பூச்சி,முதல் பருவ புழுக்களை ஏக்கருக்கு 4ஆயிரம் வீதம் விடவேண்டும்.இதனால் காய் புழுக்ககளின் முட்டைகளை உணவாக உட்கொண்டு அந்துப்பூச்சி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது
*பவேரிய பேசியான என்ற உயிர் பூச்சி கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் செடி நனையும்படி தெளிக்கவேண்டும்
*5% வேப்பம் பருப்பு சாறு தெளிப்பதால் பூச்சியின் தாக்குதல் அனைத்து பருவத்திலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
*குளோரிபைரிபாஸ் என்ற பூச்சிகொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி லிட்டர் வீதம் கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பச்சைகாய் துளைப்பான் புழு
பூச்சிகள் ,பூழுக்கள் காய்களை துளைத்து உண்டு வாழ்கின்றன.தாக்கப்பட்ட காய்கள் தரம் கெட்டு சந்தைக்கு ஏற்பதாக இல்லை.இளம் புழுக்கள் இலைகள் மற்றும் குருத்துக்களை செதப்படுத்துகின்றன.பெண் பூச்சிகள் இலை,பூ,மொட்டுகள்,காய்களின் மீது தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன.பெண் பூச்சி 300 முதல் 1000 வரை முட்டைகள் இடுகின்றன முட்டைகள் 4முதல்12 நாட்களில் பொரித்து இளம் புழுக்களாக வெளிவருகின்றன.
இந்த இளம் புழுக்கள் 15முதல்25 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து 10முதல்25 நாட்களில் மண்ணில் இருந்து கூட்டு புழு உருவாகி அந்துப்பூச்சி வெளிவருகிறது
மேலாண்மை முறைகள்
*தாக்கப்பட்ட செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்
*பயிர் செய்வதற்கு முன் வயலை நன்கு உழுது கூட்டு புழுக்களை வெளியே கொண்டு வந்து அழிக்கலாம்
*இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை வெளியே கொண்டு வந்து அழிக்கலாம்
*டிரைகோகிரம்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 20ஆயிரம் வீதம் பூக்கும் தருணத்தில் விடவேண்டும்.
*ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி லிட்டர் குளோரிபைரிபாஸ் கலந்து தெளிக்க வேண்டும்
*என்.பி.வைரஸ் பயிர்கள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்
வெள்ளை ஈ
வெள்ளை ஈயின் இளம் குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலையின் அடிப்பாகத்தில் தென்படும்.இலையின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றும்.பின்பு இலைகள் மஞ்சள் நிறமாக மாறி செடிகளின் வளர்ச்சியை குறைக்கும்.இந்த வெள்ளை ஈக்கள் நரம்பு வெளுத்தல் எனும் நச்சு நொயை உண்டாக்குகிறது.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வயல்களில் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள குஞ்சுகளை அகற்ற வேண்டும்.மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் வைத்து பூச்சிகளை கவர்ந்தது அழிக்கலாம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பாசலோன் எனும் பூச்சிகொல்லியை 2மில்லி வீதம் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும் வெர்ட்டிசிலியம் லகானி என்ற உயிர் பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரையை கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
சாம்பல் நோய் தாக்கிய இலைகளின் மேற்பகுதியில் சாம்பல் படிந்தது போன்று வெண்மையான பூசணம் காணப்படும்.நோய் தாக்கிய இலைகள் பழுத்து கருகி உதிர்ந்துவிடும் குளிர்காலத்தில் இந்நோயின் தாக்குதல் தீவிரமாக இருக்கும் இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பண்டாசிம் அல்லது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனசை போதிய தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2கிராம் மாங்கோசீப் என்ற பூஞ்சாண கொல்லியை நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெண்டை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் (மைராடா)தோட்டக்கலை தொழில்நுட்ப அதிகாரி பச்சியப்பன் தெரிவித்தார்.
நன்றி
தினத்தந்தி