நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்
Date December 17, 2015 Author By admin Category இயற்கை உரம்/மருந்து
நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்
தற்போதைய சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204 என்ற நெல் ரகத்தில் பாக்டீரியா இலைக்கீற்று நோய் அதிகமாகத் தென்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்தி, நெற்பயிரைக் காக்கும் முறை குறித்து திரூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி கூறியதாவது: தற்போதைய சம்பா பருவத்தில், ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க் கசிவான கீற்றுகள் தோன்றி, பின்னர் அவை செம்பழுப்பு நிறமாக மாறும்.
இக்கீற்றுகள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் முழுவதும் பரவும். பின்னர், இலைகள் காய்ந்து விடும்.
பாதுகாக்கும் முறைகள்: நோய் தோன்றியுள்ள வயல்களில் இருந்து மற்ற வயல்களுக்கு தண்ணீரைப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். நோய் தாக்கிய பயிரிலிருந்து விதைகளைச் சேகரிக்க கூடாது. மண் பரிசோதனைப்படி தழைச்சத்து உரம் இடவேண்டும்.
இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கோசைட் 200 கிராம் அல்லது 10 சத சாண வடிநீர் அல்லது 120 கிராம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் சல்பேட் அல்லது டெட்ரா சைக்கிளின் கலவையுடன் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து நோயின் தீவிரத்துக்கு ஏற்ப ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தெளிக்க வேண்டும்.
இவற்றைப் பின்பற்றினால், பாக்டீரியா இலைக்கீற்று நோயில் இருந்து நெற்பயிரை பாதுகாக்கலாம் என்றார் பேராசிரியர் சுமதி.
நன்றி
தினமணி
Tags: நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்