கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி 22-ந்தேதி நடக்கிறது
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், இணை பேராசிரியருமான பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, உயர்ரக இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வெள்ளாடுகளுக்கு தீவன மேலாண்மை, ஆட்டுக்கொட்டகை அமைக்கும் முறை பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் வந்து பெயர் பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள 04328 291459 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
நன்றி
தினதந்தி