கறவைமாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்
வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 8ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘கறவைமாடு வளர்ப்பில் லாபம் பெற ஆண்டுக்கு, ஒரு கன்று உற்பத்தி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், கறவைமாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க் கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவன குறைபாடுகளால் ஏற்படும் தற்காலிக மற்றும் நிரந்தர மலட்டுத்தன்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சினைப்பருவ அறிகுறிகளை தெரிந்து கொள்வது, சினைப் பருவத்திற்கு வராத மாடுகளை எப்படி சினைப்பருவத்திற்கு வர வைப்பது, ஆண்டுக்கு ஒரு கன்றினை பெற்று லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, வரும், 7ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி
தினமலர்