எள்,நிலக்கடலை சாகுபடி பயிற்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நிலக்கடலை, எள் சாகுபடி, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பயிற்சி முகாமில் நிலக்கடலை, எள் சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்தல், நிலம் தயார் செய்தல், விதைத் தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்தல், பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உரமிடுதல், களை நிர்வாகம் செய்தல், பயிர்களுக்கு ஏற்ப களைக் கொல்லிகளைத் தேர்வு செய்தல், நீர் நிர்வாகம், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம், அறுவடைபின்சார் தொழில்நுட்பங்கள், கடலைகொடியைச் சேமிக்கும் முறைகள், தீவனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286 – 266345, 266244 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி