ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க யோசனை
Date November 12, 2015 Author By admin Category தகவல்கள்
நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரத்தின் அளவை விவசாயிகள் குறைக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்தது.
நெல் சாகுபடியில் விதை, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்திடவும், பயிர் வளர்வதற்கான வளி மண்டல தழைச்சத்தைக் கிரகித்து வழங்கவும், உயிரியல் விதை நேர்த்தி, நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்யலாம். நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு விதை நேர்த்தி செய்வதால் மண் மூலம் பரவும் நோய்களான குலை நோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல், பழ நோய் ஆகியவற்றை உயிரியல் விதை நோóத்தி செய்து கட்டுப்படுத்தலாம். காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்தும், பயிர்களுக்கு வழங்குவதாலும், மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றித்தரும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உரமாக பயன்படுவதால் இவற்றை உயிர் உரம் என்றழைக்கிறோம்.
உயிரி விதை நேர்த்தி: சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் என்ற எதிர் உயிரி பூஞ்சான மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு கிலோ விதை 10 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து உலர வைத்து பயன்படுத்தலாம். அல்லது டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி: நெல் பயிருக்கு அúஸôஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை தலா 3 பாக்கெட் (200 கிராம் அளவு) ஒரு ஹெக்டேருக்கு தேவையான நெல் விதையுடன் ஒரு லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து விதைகளை மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர்கள் நன்றாக கலக்கும்படி செய்ய வேண்டும். பின்னர் 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.
நாற்றினை நனைத்தல்: உயிர் உரங்களை நெல் நாற்றின் வேர்களை நனைத்தும் பயன்படுத்தலாம். தேவையான எண்ணிக்கையில் உயிர் உர பாக்கெட்டுகளை வயலின் ஓரத்தில் கலந்து சிறு குட்டைபோல் நீர் தேக்கி அதில் வேரினை நனைத்து நடவு செய்யலாம். இதனால், வேரில் நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு பயிரின் வளர்ச்சிக்கு நன்றாக உதவுகிறது.
நடவு வயலில் நுண்ணுயிர் உரமிடுதல் : ஒரு ஹெக்டேருக்குத் தேவையான 10 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் (நெல்) 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோவுடன் கலந்து நடவுக்கு முன்னதாக வயல் முழுவதும் சீராக தூவ வேண்டும்.
இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வி.எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது: நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால் நெல் வயலில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன. மண் வளம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள தழைச்சத்தினை வேரில் ஈர்த்து வைத்து பயிருக்கு கிடைக்க செய்கிறது.
உரச் செலவு குறைகிறது. பூஞ்சான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியும், விதை முளைப்புத் திறனையும் பயிரின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்குக் கிடைக்க செய்கிறது.
எனவே, விவசாயிகள் தவறாமல் நடப்பு சம்பா நெல் சாகுபடியில் உயிரி உர விதை நேர்த்தி செய்து உரச் செலவைக் குறைத்து, அதிக மகசூல் பெற முடியும் என்றார்.
நன்றி
தினமணி
Tags: ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க யோசனை