தொல்லுயிர் கரைசல் archaeபாக்டீரியா கரைசல் எப்படி தயாரிப்பது
தயாரிக்கும் முறை
50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.
தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி பயன்படுத்துவது?
பயன்படுத்தும் முறை
200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் – 1 ஏக்கர்
10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்
தொல்லுயிர் கரைசல் நன்மைகள் என்ன ?
archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும். இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.